உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படை காவலர் தலைமையில் மலர்வளையம் வைத்து 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.

தூத்துக்குடி மாவட்டம்:
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்து கடந்த 2014ம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று (20.03.2023) திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது சொந்த ஊரான சாமிநத்தத்தில் வைத்து இன்று (21.03.2023) அன்னாரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராஜ் தலைமையில் போலீசார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சங்கரலிங்கம், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் வெங்கடேஷ், வேல்முருகன், ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் நங்கையர்முர்த்தி உட்பட காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
