உடுமலைப்பேட்டை அருகே போடிபட்டி திமுக ஊராட்சி தலைவர் மீது மோசடி புகார் வட்டாட்சியர் விசாரணை.!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக திமுகாவை சேர்ந்த சௌந்தர்ராஜன் ஊராட்சி மன்றத்தில் பல லட்சம் மோசடி முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தநிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது இதில் முறைகேடுகள் உண்மை என அறிக்கை கொடுக்கபட்டது.
ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் குறை தீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு படி கருத்து கேட்பு கூட்டம் போடி பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உடல்நிலை சரியில்லை எனக் கூறி கருத்து கேட்பு கூட்டத்திற்கு வராத காரணத்தால் வருகின்ற 24ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. என வட்டாட்சியர் கண்ணாமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போடிபட்டி ஊராட்சி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது முறைகேடு புகார் காரணமாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்திற்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.