BREAKING NEWS

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு விற்பனை நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக
விற்பனையில் முறைகேடு நடப்பதாகவும்,..

 

 

விலை அதிகமாகவும்விற்பனை செய்வதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் பொதுமக்களில் இருந்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இன்னும் இரண்டு நாட்களில்பண்டிகை முடியும் தருவாயில் சோதனை என்ற பெயரில் உணவு பாதுகாப்பு துறையினர் கண் துடிப்பு நாடகம் நடத்தி கடைக்காரர்களும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போலியாக சோதனை செய்து சென்றதால் பொதுமக்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.

 

 

மேலும் கடைகளுக்கு கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக விரிவாக்கம் செய்துள்ளதாகும் தெரிவித்துள்ளனர் இதேபோல் குட்டை திடலில் உள்ளஉணவு கடைகளிலும்முறைகேடு நடப்பதாகவும் விளையாட்டு உபகரணங்களில் விளையாட வரும் பொது மக்களுக்கு வினையச்சிடப்படாத டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாகவும்,

 

 

இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் பணத்தை அரசே கொள்ளையடிக்க ஏற்பாடு செய்துள்ளதாக வெறும் வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்தனர் குழந்தைகளுடன் வரும் பெரியோர்கள் பெற்றோர்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

 

 

இது குறித்து வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து ஏலம் எடுப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் வரையே அனுமதிக்க வேண்டுமென விரும்பினார்கள்.

CATEGORIES
TAGS