உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க வில்லை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக மாற்றுப்பாதை ஏற்படுத்தாமல்,

டிப்பர் லாரிகள் முதல் கனசக்கர வாகனங்கள் வரைசாலையின் இருவரும் சென்று வருவதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று விபத்துக்கள் இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.

இது குறித்துபல சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என மிக வேதனையுடன் தெரிவித்தனர் மேலும் இந்த தளி சாலையில் இருபுறமும் பார்க்கிங் வசதி இல்லாத கடைகளுக்கு முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
