உடுமலைப்பேட்டை யில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்ற பழமையான அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படும், ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலும் யாகசாலை பூஜைகள் மணிகண்டன், லதனீஸ்வரசிவம், ஹரிஹரன் சுவாமிநாத சிவம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக காலை 7 மணிக்கு மங்கள இசை, நான்காம் காலவேள்வி ஆரம்பம், வேதிகார்ச்சனை, கோபூஜை ஆலயவிக்ரகங்களுக்கு காப்பு காட்டுதல் நடைபெற்றது. பின்னர் புண்ணிய தலங்களான ராமேஸ்வரம். கொடுமுடி .பேரூர் திருமூர்த்தி மலை, பழனி, உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மேல் ஊற்றபட்ட பின் அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் அலங்கார பூஜை தரிசனம் மற்றும் கோவிலில் நடைபெற்றது கும்பாபிஷேக பெருவிழா
முன்னிட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். உடுமலைப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.