BREAKING NEWS

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவிய போட்டி- 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவிய போட்டி- 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி
” பரீட்சா பே சர்ச்சா ” என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு முதல் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களை சந்தித்து தேர்வு பயத்தை நீக்குவதற்காக 25 மந்திரங்களை குறித்து கலந்துரையாடி வருகிறார்.

இதை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தேசிய அளவில் 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை யில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியை போட்டி நடத்தும் மையமாக மத்திய அமைச்சகம் தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில் உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டத்தை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் உபகரணங்களும், அதுமட்டுமின்றி நம் பாரத பிரதமர் எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற புத்தகமும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஐந்து ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS