BREAKING NEWS

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..

திருப்பூர் மாவட்டம், உடுமலை ரயில்வே கேட்டில் இருந்து ராமசாமி நகர் செல்லும் வழி குண்டு குழியமாக உள்ளது ரயில்வே கேட்டில் இருந்து தொடங்கி ராமசாமி நகர் நுழைவாயில் பகுதி வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர்.

 

உடுமலை டவுன் பகுதிக்கு கிராமப் பகுதிகளில் இருந்தும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் இந்த ரோட்டைத்தான் பயன்படுத்துகின்றனர் ரோடு சேதம் அடைந்து கொண்டு இருப்பதால் நடப்பதற்கும் சிரமமாக உள்ளது.

 

 

மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நின்று விடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )