BREAKING NEWS

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.

 

கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ந. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை உரையாற்றினார்.

 

 

கல்லூரியின் ஆலோசகர் மற்றும் இயக்குநர் முனைவர் ஜெ. மஞ்சுளா அவர்கள் தொடக்க உரையாற்றினார். இயற்பியல் துறை இணைப் பேராசிரியரும், மாணவியர் சேர்க்கை குழுவின் ஒருங்கிணைப்பாளருமா ன முனைவர் எஸ். அறம் அவர்கள் கல்லூரி முதல்வருக்கும், ஆங்கிலத்துறை சுயநிதிப்பிரிவு தலைவர் முனைவர் பி.ரேணுகா அவர்கள் இயக்குநருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்கள்.

 

 

கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ். சோபனா அவர்கள் நன்றியுரையாற்றினார். 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

சுவரொட்டி தயாரித்தல், இணைப்பு விளையாட்டு, ரங்கோலி, ஓவியம், தனிநபர் நடனம், குழு நடனம், வினாடி வினா, பாட்டு, மெஹந்தி மற்றும் பேச்சு போட்டி போன்ற போட்டிகளும் பந்து எறிதல், மேசைப்பந்து, இறகுப்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

 

 

மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வணிக மேலாண்மை மற்றும் கணிப்பொறிப் பயன்பாட்டுத் துறைத்தலைவர் திருமதி பி. உமா மகேஸ்வரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தங்களது கலைத் திறமையையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

 

போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதிக அளவில் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற பள்ளிக்குச் சிறப்பு கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கல்லூரி சிறப்புக் கோப்பையைத் தட்டிச் சென்றது.கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் முனைவர். கி.மணிமேகலை நன்றியுரையாற்றினார்.

 

 

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவியர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி ஆசிரியர் மன்றச் செயலரும்,இயற்பியல் துறையின் இணை பேராசிரியருமான முனைவர் எஸ். அறம் அவர்கள் செய்திருந்தார். நிறைவாக நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

 

CATEGORIES
TAGS