உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி

உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 திட்டத்தின் கீழ்,
உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 66.50 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டிட கட்டுமான பணி,
உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 66.50 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டிட கட்டுமான பணி, மற்றும்
உடையார்பாளையம் வார்டு எண் – 2 ல், பொது நூலகம் அமைத்தல் 2023 – 2024 திட்டத்தின் கீழ், ரூபாய் 22.00 இலட்சம் மதிப்பீட்டில் முழு நேர கூடுதல் பொது நூலக கட்டிட கட்டுமான பணி,
ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள்,பேரூர் கழக நிர்வாகிக அரசு அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.