உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நியமன அலுவலர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் திரும்ப உபயோகிப்பதால் கேன்சர் போன்ற தீமைகள் ஏற்படும் எனவும், அதனை உரிய முறையில் மறுசுழற்சி செய்து அதனை சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் பயோ டீசல் ஆக மாற்றம் செய்வது குறித்து துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 81 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்வதற்காக பெறப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் இந்நிகழ்வின்போது சமையல் எண்ணை மறுசுழற்சி சம்பந்தமான சிறந்த பங்கேற்பு செய்ததற்காக துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.