உணவு பாதுகாப்பு குறித்து வணிகர்களுக்கு உணவு பாதுக்காப்பு அதிகாரி அறிவுரை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் நடைபெற்ற வணிகர்கள் சங்க கூட்டத்தில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு குறித்து உறையாற்றினார்.
” எதிர்வரும் 13.03.23 திங்கட்கிழமை காலை திருக்கடையூரிலும், 14.03.23 செவ்வாய்க்கிழமை காலை செம்பனார்கோயிலிலும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் வருகை தந்து உணவுகள் தரம் குறித்து உடனடியாக பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்பட உள்ளது.
இந்த அரிய வாய்ப்பை உணவு விற்பனை செய்யும் வணிகர்களும், பொதுமக்களும் தவறாமல் பயன்படுத்தி தாங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் தரமானதுதானா என்று வணிகர்களும், தாங்கள் வாங்கி பயன்படுத்தும் பால் மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுகள் உள்ளிட்ட உணவு வகைகள் தரமானதுதானா என்ற விபரத்தை அறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் எனவும் வணிகர்களுக்கு அறிவுரை வழங்கினார் .
அதேபோல் உணவு விற்பனைக்கு உரிமம் சான்று பெற்றுள்ள வணிகர்களுக்கான சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி 13.03.23 அன்று திருக்கடையூரில் நடைபெறவுள்ளது. வணிகர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட சான்று இனி உணவு வணிகம் செய்வதற்கு கட்டாயமாகும்.
அனைத்து உணவு வணிகர்களும் பொதுமக்களும் பயன்பெற வேண்டும் எனவும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேட்டுக்கொண்டார்.