உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம் பந்தல் (பால் பண்ணை அருகில் )புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தொடர்பாக வெளி மாநில தொழிலாளருக்கான விழிப்புணர்வு முகாமை மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.


அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், மாவட்ட வளங்கள் அலுவலர் அம்பிகாபதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், துணை பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ் மேகம், அபிராமி கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்ததாரர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்தலைப்பு செய்திகள்மயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்வெளி மாநில தொழிலாளருக்கான விழிப்புணர்வு
