உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பல சமூக செயல்களை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், சர்க்கரை, புற்றுநோய், கண் பார்வை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
இந்த மருத்துவ முகாமை திராவிட முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
TAGS உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்முக்கிய செய்திகள்