உத்தமர் காந்தி அடிகள் 76 வது நினைவு தினம் பொறையார் TBML கல்லூரியில் அனுசரிப்பு.

செய்தியாளர் க.கார்முகிலன்.
இன்று 30.01.2023 மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் “மகாத்மா காந்தி நினைவு தினம்” அனுசரிக்கப்பட்டது.
நேர்மை, கண்ணியம், அகிம்சை ஆகியவற்றின் நித்திய உருவமான தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கல்லூரி முதல்வர்.Dr. ஜீன் ஜார்ஜ், பேராசிரியர்கள், ஆய்வக அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழியினை கல்லூரி முதல்வர் முன்மொழிய பேராசிரியர்கள், ஆய்வக அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்.Dr.I.ஜோசப் பன்னீர்தாஸ் மற்றும் பேராசிரியர்.Dr.B.கவிதா ஆகியோர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.