BREAKING NEWS

உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை  தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள்  நன்றி தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பனப்பாக்கம் உளியநல்லூர் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சருக்கு வைத்த கோரிக்கையை தொடர்ந்து உயர் மட்ட பாலம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பனப்பாக்கம் உளியநல்லூர் உயர்மட்ட பாலம் மற்றும் சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் பகுதியில் அமைந்துள்ள உயர்மட்ட பாலம் என இரண்டு பாலத்திற்கும் சேர்த்து ஆறு கோடியே அறுவது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.

50 ஆண்டு காலமாக உயர் மட்டபலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.உடன் திட்ட இயக்குனர் லோகநாயகி,

நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், நெமிலி ஒன்றிய செயலாளர் பெருமாள், பனப்பாக்கம் நகரச் செயலாளர் சீனிவாசன்,பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர் மாறன், உளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS