உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது என மதுரா மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி பேட்டி.
தஞ்சாவூர்,
பரதக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரும், ஹிந்தி திரைப்பட நடிகையான ஹேமா மாலினி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரதநாட்டியத்திற்கு என்று ரசிகர்கள் உள்ளனர். அதனை கற்றுக்கொள்ள மாணவர்களும் உள்ளனர்.
அதேபோல் திரைப்படத்தில் உள்ள நடனம் அது வேற மாதிரி. உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது. சினிமாவில் வந்துவிட்டது என்பதால் ரசனை குறைந்து விட்டது என்பது இல்லை அவர் தெரிவித்தார்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழாசினிமாதஞ்சாவூர் பெரியகோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்