உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மேலகரம் அமைந்துள்ள ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர் களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தபால் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் தேதி உலக அஞ்சல் தினம் கடை பிடிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது அன்பு, பாசம், நட்பு தகவல் களையும் தெரிவிப்பதற்கு தபால் சேவை அவசியமான ஒன்றாகவும் இருந்து வந்தது.
தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சமூக வலைதளம் வாயிலாக தகவல்கள்தெரிவிக்கப்பட்டுவிடுகின்றது.
இருந்தாலும் அஞ்சல் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தென்காசி மேலகரம் அமைந்துள்ள ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர்களுக்கு தபால் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தாங்களாகவே கடிதத்தில் தங்களது அன்பை எழுதியதுடன் தபால் பெட்டியில் பெற்றோர்களுக்கு தங்களது கடிதத்தை மகிழ்ச்சியோடு அனுப்பிவைத்தனர்.
அந்த வகையில் மாணவர்கள் தபால் மற்றும் கடிதம் எழுதும் முறை குறித்து அறிந்துகொள்ளவும் ,கடிதம் எழுதும் திறனை ஊக்குவிக்கவும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.