உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு..

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக சமப்படுத்துதல் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். முன்னதாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு ஆகியவையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை பேரணியில் கொண்டு சென்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS உலக எய்ட்ஸ் தினம் தஞ்சையில் விழிப்புணர்வுதஞ்சாவூர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணிதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மருத்துவம்மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்முக்கிய செய்திகள்
