உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை அருகில் உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி கிராமம் முழுவதும் வலம் வந்து இறுதியாக பள்ளியில நிறைவடைந்தது. பேரணியில், பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தூய்மை குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்உலக கழிப்பறை தினம்குளிச்சப்பட்டு கிராமம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்