BREAKING NEWS

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிப்பறை தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயணப் பேரணி பெரியபிள்ளை வலசையில் இன்று நடைபெற்றது.  

 

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்லப்பா அனைவரையும் வரவேற்றார்.

 

 

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை நடைப்பயண பேரணியை தொடங்கி வைத்தார். 

 

திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறையை பயன்படுத்த வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக பெரியபிள்ளை வலசை ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

 

 

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் நத்தடு அம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், குழந்தை மணி, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண சண்முகம்,

 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலைச்செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ரேவதி, வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஈஸ்வரி, உதயகுமாரி, பாலா, முத்துக்குமார், ராம்குமார், சந்தனக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )