உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் வளாகத்தில்
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் தலைமையில் புகையிலை மற்றும் போதையினால் ஏற்படும் இன்னல்களை எடுத்து கூறி அவற்றை கைவிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கூறினார்.
அவரை தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி
V.S.பாலமுருகன்குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி K.விஜயகுமார் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 R.மீனாட்சி கலந்து கொண்டனர்.
மேலும் புகையிலை மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு உரையை செல்வி.ஶ்ரீ மிக்த்ரா மற்றும் செல்வி.சூர்யா ஆகியோர் மக்களுக்கு எடுத்து கூறினர்.இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுனர். பின்பு அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.