BREAKING NEWS

ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நேற்று தொடங்கியது.

 

 

அதனை மாவட்ட திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி( PD )அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)  ராமகிருஷ்ணன் AD (Panchayat) அவர்கள் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்களை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து அன்று மாலை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் பயிற்சியினை ஆய்வு செய்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் அவர்களுடன் மாவட்ட செயற்பொறியாளர் திரு செந்தில்குமார் (EE) அவர்களும் சிறப்புரை ஆற்றினார்.

 

இந்த பயிற்சியினை மாவட்ட வளமைய அலுவலர் திரு உத்திராபதி ஏற்பாடு செய்திருந்தார்.

CATEGORIES
TAGS