BREAKING NEWS

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை களத்தில் இறங்கிய காவல்துறை கையும் களவுமாக சிக்கிய நபர்

 

 

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட் விற்பனை செய்வதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், எடப்பாடி போலீசார் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

 

இதையடுத்து, நேற்று சந்தேகத்திற்கிடமாக கந்தபிள்ளையார் கோவில் அருகே சுற்றித்திரிந்த செல்வராஜ் என்பவரை பிடித்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வெள்ளை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 

மேலும், செல்வராஜ் (34) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் லாட்டரி சீட் விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )