எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த எடப்பாடி போலீசார், செங்கோட்டையன் என்பவரை அழைத்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வெள்ளை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், செங்கோட்டையன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் லாட்டரி சீட் விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட வெளிமாநில லாட்டரி சீட் எண்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
CATEGORIES சேலம்
TAGS எடப்பாடிகுற்றம்தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்லாட்டரி சீட்
