BREAKING NEWS

எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் தேர் இழுப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு.

எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் தேர் இழுப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு.

சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள அருள்மிகு தேவகிரி அம்மை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்கள் பெருவிழா கடந்த இரண்டு தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று 63 நாயன்மார்களின் சிலைகளை நான்கு வாகனங்களில் வைத்து பூ அலங்காரம் செய்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த நிகழ்வு நடைபெறாத இருந்த நிலையில்,

 

 

இந்த ஆண்டு சிவனடியார்களின் சொந்த செலவில் 63 நாயன்மார்களில் சிலைகளை அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களை வைத்து சிவனடியார்கள் இழுத்துச் செல்வது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தேர் வாகனங்களை பராமரிக்கும் அமைப்பினர் இந்த ஆண்டு தங்களுக்கும் தேர் இழுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இது தரப்பினருடைய மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு தரப்பினரையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை யாரும் குறிப்பிடக் கூடாது என போலீசார் உறுதியாக தெரிவித்ததால், 

 

அலங்கரிக்கப்பட்ட நான்கு வாகனங்களையும் சிவனடியார்கள் முக்கிய வீதி வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றபோது வழி நெடுகிலும் உள்ள பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

 

இந்த நிலையில் இருதரப்பினுடைய மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் ஏராளமான போலீசார் தொடர்ந்து பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )