எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!
![எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!! எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221021-WA0065.jpg)
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது.
மேலும், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 3 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பலமான சத்தத்துடன் இடி தாக்கியதில், சௌரிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மேல்புற சுவர் சேதமானது.
மேலும், பள்ளியின் உள்ளே இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக பள்ளிக்குள் இருந்த 92 மாணவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர். பின்னர், மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த எடப்பாடி வட்டாட்சியர் லெனின், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் நல்லதம்பி ஆகியோர் பள்ளி கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பள்ளி மீது மின்னல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லையென்றும், மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், போதிய இடவசதி இல்லையென்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய அறை அமைத்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.