எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் திருச்சியில் தொடர் முழக்க போராட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது.
நியாயமான காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுப்பை மறுத்து ஆப்சென்ட் போட்டு தண்டனை வழங்குவதை கண்டித்தும், சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்குவதை கண்டித்தும், தேவையான தரமான உதிரி பாகங்களை வழங்க கோரியும்,
எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த தொடர் முழக்க போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.