எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் கடந்த 7ம் தேதி முன்பு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஐ.டி விங்க் தலைவர் நிர்மல் குமார் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பேசிய விட்டு சென்று உள்ளதாகவும் கூட்டணி தர்மத்தை மீறி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இணைத்து கொண்டதாகவும் கூறி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரௌடி தலைமையில் பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியும் உருவப்படத்தை எரித்தும் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய பாஜகவினர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்த இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன மணியாச்சி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டரை அதிமுகவினர் கிழித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் அறிவிப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.