எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம் மாவட்டம்
கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் வீட்டில் இன்று மாலை 6 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, உடனடியாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
தீ பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES சேலம்
TAGS ஆத்தூர் தீயணைப்பு நிலையம்கல்பகனூர் ஊராட்சிசேலம் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்