எல்ஐசி பெயரை பயன்படுத்தி என்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்த நபரை கைது செய்ய கோரியும் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேலக்கூடலூரைச் சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் இராணுவ வீரரான இவரிடம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் எல்ஐசி ஏஜென்ட் என கூறி பாலிசி எடுக்க சொல்லி அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், சட்டபடி சிறுசேமிப்பு திட்டம் நடத்துவதாக கூறி முருகேசன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரிடம் 1லட்சம் ரூபாய்கான சீட்டு பணம் பெற்றதோடு தற்போது வரை பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகேசன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரை போல 80ற்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை இழந்தவர்கள் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரியும், எல்ஐசி ஏஜென்ட் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.