BREAKING NEWS

எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பற்றி புரிந்து கொண்ட நாசர், நஜிப் உசேன், தமிம் அன்சாரி ஆகியோர்கள் கட்சியின் நகர செயலாளர் காஜா முகைதீன் முன்னிலையில் தேசிய எஸ்டிபிஐ கட்சியில் முழுவதுமாக தன்னை இணைத்து கொண்டனர். மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

நகராட்சி மூலமாக குறிப்பிட்ட சில வார்டு பகுதிக்கு மட்டும் நல்ல குடிதண்ணீர் வழங்கி வருவதாக பொதுமக்களிடம் புகார் வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் நல்ல குடிதண்ணிர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும் அனைத்து பகுதி மக்களுக்கும் நகராட்சி நிர்வாகம் கவனம் எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்திற்கு உடனடியாக காவல்நிலை ஆய்வாளர் நியமிக்க வேண்டும் என்று நகரகுழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் நகர துணை தலைவர் கபீர்,மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பீமாஸ் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இணை செயலாளர் ரபிக் நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS