எஸ்.ஆர்.எம்- பட்டமளிப்பு விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று 1,214 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
செங்கல்பட்டு செய்தியாளர் சங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்..
தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி (பொறுப்பு) ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்று 1,214 மாணவ, மாணவிகளுக்கு பட்டமும், 6மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவி பச்சைமுத்து, தாளாளர் ஹரினி, கல்லூரியின் முதல்வர் வாசுதேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேசிய ஆளுநர் தமிழிசை இந்தியாவிலேயே இளம் வயது ஆளுநராக தெலுங்கானாவிற்கு பொறுப்பேற்ற பிறகு இவர் எப்படி சமாளிப்பார் என்று என்னை பலர் விமர்சனம் செய்தனர்.
ஆனால், அதனை எனது கல்வியறிவு மூலம் வெற்றி கொண்டேன். அதுபோலவே, புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக கூடுதல் பொறுப்புக்கு வந்த பிறகும் மீண்டும் விமர்சனம் செய்தனர்.
ஆனால், அதனையும் எனது கல்வியறிவு மூலம் வெற்றிக் கொண்டேன். அதுபோலவே, மாணவர்களும், தங்களின் கல்வி அறிவு மூலம் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்க முடியும்..
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதாரணமாகத்தான்
இருப்பார்கள். அவர்களை ஆசிரியர்கள்தான் ஊக்கம் கொடுத்து, செதுக்கி சமூகத்தில் பெரிய மனிதர்களாக மாற்றுகின்றனர்.
ஆதலால், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றும் மரியாதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் இலக்குகளை பெரிய அளவில் வைக்க வேண்டும்.
இந்தியா 150 நாடுகளுக்கு தனது உள்நாட்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது. இவை அனைத்தும் கல்வி கற்ற அறிஞர்களாளே சாத்தியமானது. இதுபோல, மாணவர்களும் நமது நாட்டை முன்னேற்றும் வகையில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்றார்.
பாரிவேந்தர் பேசும்போது, ‘எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு 14 லட்சம் ரூபாய் அளவுக்கு இலவச கல்வியை வழங்கிவருகிறது,
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்கும் இடத்தையும் இலவசமாக வழங்கி வருகிறது’ என்றார். அதேபோல்இங்கு பயின்ற மாணவ மாணவிகளுக்கு வேலையும் பெற்றுத்தருகிறது என்று பேசினார்.
மேலும் இந்நிகழ்வில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவராஜ், துணை முதல்வர் மதியழகன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என பலர் பங்கேற்றனர்.