எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்து சோதனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது,
மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணி வழங்கிய வகையில் அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணை அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல் வடவள்ளி பகுதி உள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மாணவருமான சந்தோஷங்கள் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
இதனிடையே குனியமுத்தூரில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எம்எல்ஏக்கள் உட்பட அதிமுகவினரை காவல்துறை கைது செய்து செய்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.