BREAKING NEWS

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அண்ணா சாலை.படகு இல்லம் மற்றும் சேலம் செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடு, நாய்கள் நடமாடுகின்றன. இதனால் நடந்து சென்று இயற்கை அழகைக் கண்டு மகிழும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

 

வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்காடு பேருந்து நிலையம் மாடுகளின் கூடாரமாக உள்ளதால் மாடுகளின் கழிவுகள் அப்பகுதிகளை அசுத்தப்படுத்தி துர்நாற்றம் வீசச் செய்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுஇடங்களில் விலங்குகள் நடமாடுவதைக் கண்காணித்து தடை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS