BREAKING NEWS

ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.

ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி சுவரைத் தாண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பூவரசன் (17),ஏஞ்சல் (13) ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனத்திற்கு பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில்,

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS