ஏ எஸ் பி பெயரில் வசூல் வேட்டை நடத்தும் வேலூர் போக்குவரத்து பிரிவு எஸ்ஐ ம.குமார்

வேலூர் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ம.குமார். இவர் வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் அப்சரா திரையரங்கம் அருகில் சாலையோரம் நின்று கொண்டு இது ஒருவழிப் பாதை என்று கூறிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை வம்படியாக வழிமறித்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வோரை வழிமறித்து நிறுத்தி அவர்களது வாகனத்தில் இருக்கும் சாவியை வெடுக்கென எடுத்துக் கொள்வது, அவர்களது வாகனங்களை ஓரங்கட்டி அவர்களிடம் பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எவ்வித ரசீதும் வழங்காமல் அவர்களை அனுப்பி விடுகிறார். இந்த நேர்மையான அதிகாரி குமார்.
இவரது செயல்பாடு காவல்துறைக்கு சவால் விடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் இவர் கடுமையாக நடந்து கொள்கிறார்.
அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வோரை வழிமறித்து அல்லது வாகனங்களை நிறுத்துவதால் சிலர் வேகமாக வந்து திடீரென பிரேக் போடுவதால் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இவர் செய்யும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களால் யாராவது தங்களது இன்னுயிரை துறக்க நேர்ந்தால் அவர்களது குடும்பத்துக்கு குமார் உதவிகரமாக செயல்படுவாரா?
என்பதுதான் இன்றைய வாகன ஓட்டுனர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. ஏன் வாகனத்தை இங்கே நிறுத்தி தேவை இன்றி வீண் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டால் ஏ எஸ் பி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாங்கள் இங்குதான் நிறுத்தி வாகனங்களை வழிமறித்து பிடித்து வழக்கு பதிவு செய்கிறோம் என்று தைரியமாக பதில் அளிக்கிறார் இந்த கடமை வீரன் குமார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கேட்டால் நாங்கள் ஏ எஸ் பி சொல்லித்தான் இந்த வேலையை செய்கிறோம் என்று பழியை அவர் மீது போடுகிறார் வரம் கொடுத்தவர் தலையில் கைவைத்துப் பார்த்து அந்த வரம் வேலை செய்கிறதா என்று பார்க்கும் நபர்களில் குமாரும் ஒருவர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.
இவ்வாறு காவல்துறையில் வேலூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர்களில் மா குமார் சற்று வித்தியாசமானவர் உணர்ச்சிவசப்படக் கூடியவர் உணர்ச்சியை தனக்கு அடுத்த தெரியாது கோபம் வந்தால் அடிக்க கூட பாய்வார் என்று தெரிய வருகிறது.
இவரது நடவடிக்கை பொது மக்களிடம் முகம் சுளிக்க வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆபிஸர்ஸ் லைனில் குறிப்பாக ஊரிஸ் பள்ளி மற்றும் கல்லூரி அருகில் கடை வைத்துள்ளவர்கள் செல்வதற்கு கூட இவர் தடை விதித்து அப்படிவா என்று ஒருமையில் பொதுமக்களை அழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் காவல்துறையில் கண்ணியமிக்க காவலராக பணியாற்றுகிறாரா அல்லது தெருவில் சுற்றித் திரியும் ரவுடிகள் போல செயல்படுகிறார் என்பது காவல்துறைக்கு வெளிச்சம் குறிப்பாக வருகிறார் கலெக்சனை பார்க்கிறார் சென்று விடுகிறார் அதாவது கரப்ஷன் கலெக்ஷன் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறார் இந்த போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் குமார் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை
இதற்க்கு பிறகு இவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றால் நல்ல தெளிவாக விசாரித்தால் உண்மை என்னவென்பது வெளியில் வரும் அதன் பிறகு இவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளதா என்பதை மட்டும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் வாகன ஓட்டுக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இவரது செயல்பாடு அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்பது வாகன ஓட்டுக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதை குறி வைத்து பின்பக்கத்தில் இருந்து தடியால் வீசி ஒருவரை உயிர் போக காரணமாக இருந்த காவல்துறையின் நடவடிக்கை அப்போது வன்மையாக கண்டிக்கப்பட்டது அதே நிலை குமாரால் வேலூர் போக்குவரத்து பிரிவில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் குமாரை கண்டித்து வைத்தால் நலம் என்கின்றனர் சமூக அலுவலர்களும் வாகன ஓட்டுக்களும் இனி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்.