BREAKING NEWS

ஐஎப்ஐ நிதி நிறுவனத்தின் உதவியாளரான ஜெகநாதன் என்பவரின் வீட்டின் முன்பு 100 -கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகை…

ஐஎப்ஐ நிதி நிறுவனத்தின் உதவியாளரான ஜெகநாதன் என்பவரின் வீட்டின் முன்பு 100 -கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகை…

ராணிப்பேட்டை மாவட்டம்;
நெமிலி, ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 8000 முதல் 15000 ஆயிரம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் கோடிக்கணக்கிலத்தை முதலீடு செய்தனர்.

ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளராக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில் ஜாமினில் அவர் வெளியே வந்து தலைமுறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நெமிலியில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நெமிலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 ககும் மேற்பட்ட முதலீட்டாளர் ஜெகநாதன் வீட்டை முற்றுகையிட்டனர். ஜெகநாதன் வந்து உரிய பதில் சொல்லும் வரை நாங்கள் இவ்விடத்தை விட்டுப் போக மாட்டோம் எனவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பின் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

CATEGORIES
TAGS