ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும்,..
சிவகங்கை சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் தின விழாவை குழந்தைகள் நண்பன் வார விழா மற்றும் வளர்ச்சிக்கான விளையாட்டு பிரச்சாரம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவமணி தலைமை வகித்தார்.
பிரச்சாரத்தின் நோக்கங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சைல்டு லைன் இயக்குனர் ஜீவானந்தம், குழந்தை திருமணம் மற்றும் பாலியல் தாக்குதலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதின் முக்கியத்துவம் குறித்து..
சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ரசீந்திரகுமார் ஆகியோர் கருத்துரையாற்றினார். குழந்தைகள் பங்கேற்புடன் விளையாட்டு முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி, விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் கலைச்செல்வி ஜெயலதா, கயல்விழி, சரவணன்,சைல்டு லைன் உறுப்பினர்கள் மனோகரி, முகேஷ்கண்ணன், சரவணன் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.