BREAKING NEWS

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை வழங்கி வாழ்த்திய எம்எல்ஏ,எம்பி மற்றும் மேயர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை சாலையில் வரம் சூப்பர் ஸ்பெஷாலட்டி என்னும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..

 

இம்மருத்துவமனை சார்பில், ரிங்ரோடு சாலையில் உள்ள பவானி போலசில் “வரம் வளைகாப்பு” என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சிறப்பு அழைப்பாளர்களாக ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்..

 

 

பல்வேறு பகுதிகளிலிருந்து 430 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றிருந்த நிலையில் அவர்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, தலா 5000 ரூபாய் மதிப்பீட்டில் புடவை, குழந்தைகளுக்கான உடை உள்ளிட்டவைகள் சீராக வழங்கப்பட்டது

 

பின்னர் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, நடைப்பயிற்சி மேற்க்கொள்வது சுகப்பிரவசமாக யோகா பயிற்சி மேற்க்கொள்வது குறித்து வரம் மருத்துவமனை நிறுவனர் பிரியதர்ஷினி எடுத்துரைத்தார்..சிறப்பு அழைப்பாளர்களும் கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

 

இந்நிகழ்ச்சியை சின்னதிரை பிரபலம் மணிமேகலை தொகுத்து வழங்கினார். பின்னர் கர்ப்பிணி பெண்கள், உறவினர்கள் என பலருக்கும் 6வகையான சுவையான உணவு பராமரிக்கப்பட்டது

CATEGORIES
TAGS