ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்கள் அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வரப்படும்.
அதன்படி, ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் துர்கா ராணி தலைமையில் கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது. இதில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், நடனம், நாடகம், ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் அதற்காக தற்போது இந்த கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.