ஒடுக்கத்ததூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் வழங்கினார்.

வேலூர், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
இவ்விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.
அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு,
ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கரன்,
ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன் துணை செயலாளர் திருமதி.L.மலர்விழி பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா,
பேரூராட்சி சேர்மன் திருமதி. சத்தியவதி பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்