ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள். அங்கன்வாடி ஊழியருக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும்,
10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உயிர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒன்றிய அரசு மாநில அரசும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.
CATEGORIES வேலூர்
TAGS அங்கன்வாடி உதவியாளர்கள்அங்கன்வாடி ஊழியர்கள்அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்