BREAKING NEWS

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது 46 டிரைவராக உள்ளார் இருவரும் புதன்கிழமை இரவு ஏர்போர்ட்டிற்கு சென்று  வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வந்துள்ளனர்.
பின் நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை வியாழ கிழமை அதிகாலையில்  தென்னமநாடு தெற்கு தெரு  நடைப்பாலம் வழியா வயலுக்கு சென்ற விவசாயிகள் பாலத்தின் நடுவே இரு சக்கர வாகனம் பீர் பாட்டில் செப்பல்  ரத்த கரையுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனே ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மோப்ப நாயுடன் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள தேத்தவாடி அய்யனார் கோவில் வரை சென்று  நின்றுவிட்டது இது குறித்து போலீசார் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் காவல் துறையினருக்கு அடையாளம் தெரியாத சடலம் கிடந்தால் தெரியபடுத்த வேண்டும் என கூறிய நிலையில்,
திருச்சி பாலக்கரை அருகே பாலத்தின் கீழே இரண்டு சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து துறையூர் போலீசார் சுடலத்தை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
பிரபு கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு பிரபு வசித்து  தெருவை சேர்ந்த ஹரி, சூர்யா, இருவரையும் தேடி சென்ற போது கொலை செய்த குற்றவாளிகள் உறவினர்களுடன் துக்கத்தை அனுசரித்து வந்துள்ளனர் அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது பிரபு உறவினர் வீட்டு பெண்களையும், தனது காதலியையும்  கிண்டல் செய்ததால் தனியாக அழைத்து மது வாங்கி கொடுத்து கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும்,
ஆனால் பிரபுவுடன் ஸ்டாலின் வந்ததும் சற்று தயங்கி ஸ்டாலினை வீட்டிற்கு செல்லுமாறு பலமுறை கூறினோம் ஆனால் அவர் மதுவுக்கு ஆசைப்பட்டு அங்கேயே இருந்து விட்டார். வேறு வழியின்றி இருவரையும்  கொலை செய்து காரில் எடுத்து சென்று திருச்சி அருகே ஒரு பாலத்தின் கீழே தூக்கி வீசிவிட்டு வந்து விட்டோம் என ஒப்பு கொண்டனர்.
பின் இருவரையும் திருச்சி தனிப்படையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் சம்மந்தபட்ட மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  ஒரே நேரத்தில் இரண்டு கொலை நடந்தது அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும், பரபரப்பையும், ஏற்படுத்தி உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS