ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் அனைவருக்கும் முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும் அதை நடைமுறைப்படுத்தாத அரசை கண்டித்தும்
சுகாதார ஆய்வாளர் நிலை 1 பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்திட வலியுறுத்தியும்,
சுகாதார ஆய்வாளர்களது ஊதியத்தை ரூ 20000 என உயர்த்தி வழங்கக் கோரியும்
தற்சமயம் பணியில் உள்ள அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் HE, PA, NMS & BHS பணியிடங்களுக்கான Zero Councelling நடத்த வலியுறுத்தியும்.
இக் கலந்தாய்வு முடிவடைந்த உடன் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வலியுறுத்தியும்… காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.