ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 17.3.23 நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில்,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் இ.ஆ ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள்,
தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.