BREAKING NEWS

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி வேலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி வேலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு..

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க கோரியும், அதனை தடைவிக்க கோரியும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்தக்கோரியும்,.

 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடிய செய்து துவக்கி வைத்தார்.

 

இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள், மகளிர் குழுவினர், தூய்மை பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா கலையரங்கம் வரை நடைபெற்றது.

 

முன்னதாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS