BREAKING NEWS

ஒரே நாளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு வருவாய் துறையினர் மூலம் சீல் வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,

ஒரே நாளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு வருவாய் துறையினர் மூலம் சீல் வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்., பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி 06. சங்கராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கடுவனூர் மற்றும் பூட்டை கிராமங்களில் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி மற்றும் லோகேஸ்வரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டபோது 1.சேகர்(47)த/பெ கோவிந்தன், கடுவனூர் 2.சாந்தி க/பெ ஏழுமலை, கடுவனூர் மற்றும் 3.அப்துல் கவாப்(48) த/பெ அப்துல் கரீம், பூட்டை ஆகியோர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைதுசெய்யப்பட்டனர். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி வருவாய்துறையினர் மூலம் மேற்படி மூன்று கடைகளையும் மூடி சீல் வைத்தனர்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை, விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS