ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.
வேப்பூர் அருகே ஒரே நாளில் சிறுமியிடம் பாலியல் தொல்லை, மோட்டார் பைக் மற்றும் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்/.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதியழகன், 50. இவர், கடந்த 6ம் தேதி இரவு தஞ்சாவூர் மாவட்டம், மைக்காரன்பட்டியிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு, தனது மோட்டார் பைக்கில் மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 12வயது மகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்மநபர்கள், மதியழகனை தாக்கி, அவரது செல்போனை பறித்து விட்டு, அவரது 12 வயது மகளை கடத்தி சென்று, விருத்தாசலம், செராமிக் ஆலை அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்தனர். அப்போது, ஆள் நடமாட்டம் இருந்ததால் சிறுமியை அங்கே விட்டு தப்பி சென்றனர். இது குறித்து புகாரில் வேப்பூர் போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு விருத்தாசலம் அருகே இரண்டு மர்மநபர்களை மடக்கி பிடித்து வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அதில், விருத்தாசலம், இந்திரா நகரைச் சேர்ந்த கபாரூதின், 23, விருத்தாசலம் அடுத்த பரவளுரைச் சேர்ந்த விஷ்வா, 25 என்பதும், நேற்று முன்தினம் நள்ளிரவில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மதியழகனை தாக்கி செல்போன் திருடியதும், அவரது மகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.
மேலும், அதே நாளில் வேப்பூர் பகுதியில் விளம்பாவூரில் ஒருவரை தாக்கி செல்போன் மற்றும் பைக் திருட்டு, சேப்பாக்கத்தில் ஒருவரை தாக்கி செல்போன் தாக்கி செல்போன் திருட்டு, ஜவதுகுடியில் செல்போன் திருட்டு, காடாம்புலியூர் பகுதியில் மூன்று இடங்களில் மூவரை இரும்பு கம்பியால் தாக்கி செல்போன் திருடியதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, அவர்களிடம் 8 செல்போன்கள், 3 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம், இந்திரா நகரைச் சேர்ந்த கபாரூதின், 23, விருத்தாசலம் அடுத்த பரவளுரைச் சேர்ந்த விஷ்வா, 25 ஆகியோரை செய்தனர்.