ஓட்டுநர்களுக்கு பணிப்பாதுகாப்பு, ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி ஓட்டுநர்கள் போராட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் கருப்பு கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர். மேலும் தங்களது 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மதிய மாநில அரசுகளுக்கு எதிராக ஓட்டுநர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பட்சத்தில் போராட்டங்கள் வலுப்பெறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்ஓட்டுநர்கள் போராட்டம்ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி