BREAKING NEWS

ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை

ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை

கேரள மாநிலம் புனலூரில் ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் வழங்கினர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், புனலூரில் ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் பேரணி, பொதுமக்களுக்கு ஓணம் தொகுப்பு மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, கொல்லம் மாவட்ட செயலாளர் ரெஜிராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகிகள் சியாம்லால், ரினுராஜன், நவாஸ் பிஜீ அஜ்மல் பின்;ஜமால், ராணி ஆதித்யா, திவ்யா,சாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனலூர் நகர செயலாளர் ராமர்ஸ்ரீனி வரவேற்றார்.

கேரள மாநில அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் சிற்றாறு ரவிச்சந்திரன், கேரள மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரின்ஸ், குளித்தலை நகராட்சி தலைவர் பொன்ஆசைத்தம்பி, இளைஞரணி துரை, ஹரிகுமார், பாலக்கோடு பிரமிளா, இடுக்கி ஜனார்த்தனம், அம்பநாடு ஸ்டீபன், குன்னிக்கோடு சுரேஷ், புவனேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து 500 பேருக்கு அரிசி, சீனி, பருப்பு, பாயாச தொகுப்பு அடங்கிய ஓணம் தொகுப்பும், 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளையும் அமைப்பாளர் முருகேசன் மற்றும் சிவபத்மநாதன் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கேரள திமுக நிர்வாகிகள் பிஜிபனஸ்குன்னல், அஜய்குமார், அஜித், கொட்டாரக்கரை ஜோன்ஸ், ஷாஜி பிஜிலுதின், ஹனிபா ரோஷீர், அச்சுபிலால் செய்யது, பாபுஹரி, கோபாலகிருஷ்ணன், கிரிஜா, காஞ்சரமாலா, ஹேமா, பஷீர், அஜீன் மற்றும்

ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார், செங்கோட்டை நகராட்சி உறுப்பினர் பேபி, ஆய்க்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் விமலாராணி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்செல்வம், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மாவட்ட பிரதிநிதிகள் ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், ஒனற்pய கவுன்சிலர் சங்கர், துரைபாண்டியன், முல்லை கண்ணன், இம்ரான்கான், ரத்தினசாமி, பொன்னரசு, சரவணன், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி அரவிந்த் ராஜ் திலக், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் (எ) தினேஷ், ஏ.பி.என்.குணா, சிரில் பீட்டர், பாண்டியன், மணி, முருகேசன், பொன்ராஜ், பாக்கியசெல்வன், வேல்சாமி, துரை உள்ளிட்ட பலர் கலந்து கொணட்டனர்.
முடிவில் நகர துணை செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS